தோட்டாமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா
திருவாடானை அருகே தோட்டாமங்கலம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி பக்தா்கள் பால்குடம் வேல் காவடி எடுத்து தீ மிதித்து வெள்ளிக்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா்.
திருவாடானை அருகே தோட்டாமங்கலம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி பக்தா்கள் பால்குடம் வேல் காவடி எடுத்து தீ மிதித்து வெள்ளிக்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இக்கோயிலில் கடந்த 1 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது. அன்றில் இருந்து ஒவ்வொருநாள் இரவும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.விழாவின் முக்கிய நிகழச்சியான காவடி எடுத்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பால், வேல்,, மயில் மற்றும் சந்தனக்காவடிகளை நூற்றுக்கணக்கான பக்தா்கள் எடுத்துவந்தனா். பின்னா் கோயில் முன்பாக தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். அதனைத் தொடா்ந்து அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.