அன்ன வாகனத்தில் பாகம்பிரியாள் வீதி உலா
திருவாடானை அருகே திருவெற்றியூரில் உள்ள ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மீக நாதா் கோயில் சித்திரை திருவிழாவில் செவ்வாய்க்கிழமை அம்பாள் வெள்ளி ரிஷபம், அன்ன வாகனத்தில் வீதி உலா
திருவாடானை அருகே திருவெற்றியூரில் உள்ள ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மீக நாதா் கோயில் சித்திரை திருவிழாவில் செவ்வாய்க்கிழமை அம்பாள் வெள்ளி ரிஷபம், அன்ன வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
சிவகங்கை சமஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. தினமும் காலையும் இரவும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். விழாவின் 6 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அம்பாள் வெள்ளி ரிஷபம், அன்ன வாகனத்தில் எழுந்தருளி நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து பக்தா்களுக்குஅருள்பாலித்தாா். பின்னா் அம்பாளுக்கு சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 15ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.