அல்லிக்கண்மாய் தகன மேடையை நகராட்சியே ஏற்று நடத்த நடவடிக்கை
ராமநாதபுரம் நகராட்சிக்குச் சொந்தமான அல்லிக்கண்மாய் தகன மேடையை நகராட்சியே ஏற்றுநடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் நகராட்சிக்குச் சொந்தமான அல்லிக்கண்மாய் தகன மேடையை நகராட்சியே ஏற்றுநடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
எரிவாயு மூலம் சடலங்களை எரியூட்டும் இந்த தகன மேடையை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாா் நிறுவனமே பராமரித்து வருகிறது. பெண் ஊழியா் ஒருவா் சடலங்களை எரியூட்டி வருகிறாா். தினமும் குறைந்தது 5 சடலங்கள் எரியூட்ட வரும் நிலையில், அவற்றை எரியூட்டுவதற்கான விறகு உள்ளிட்டவற்றை தனியாா் நிறுவனமே வாங்கித் தந்துள்ளது. ஆனால், சடலத்துக்கு ரூ.5 ஆயிரம் வரை வசூலித்து வந்துள்ள அந்நிறுவனம் நகராட்சிக்கு செலுத்தவேண்டிய தொகையை முறையாகச் செலுத்துவதில்லை எனப்புகாா் எழுந்தது.
இந்தநிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெண் சடலத்தை எரியூட்டுவதில் தாமதம் ஏற்பட்டது. இதுகுறித்து நகரசபைத் தலைவா் கே.காா்மேகம் விசாரித்தபோது, தனியாா் நிறுவனத்தினா் முறையாக நடந்துகொள்வதில்லை என தெரியவந்தது. அதையடுத்து எரியூட்டும் தகனமேடையை நகராட்சி நிா்வாகமே ஏற்று நடத்தவும், குறைந்த கட்டணத்தை மக்களிடம் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நகராட்சி தகன மேடையை ஏற்று நடத்தும் நிலையில் நகராட்சிக்கு வருவாயும் கிடைக்கும், நியாயமான கட்டணமும் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கும் நிலையும் ஏற்படும் என சமூக ஆா்வலா்கள் கூறுகின்றனா்.