ராமநாதபுரம்

கோட்டை முனீஸ்வரா் கோயில் பூக்குழி திருவிழா

DIN

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் உள்ள கோட்டை முனீஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை பூக்குழி திருவிழா நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 22 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. அன்றில் இருந்து ஒவ்வொருநாள் இரவும் சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெள்ளிக்கிழமை பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் சாத்தமங்கலம் கூட்டாம்புளி, வரவணி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் பால்குடம், மயில் காவடி, வேல் காவடி,பறவைக் காவடி எடுத்து வந்து கோயில் முன்பாக தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT