முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானை அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருவாடானை அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

திருவாடானை அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவாடானை அருகே கூகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் சேது உடையாா் மகன் முத்துசாமி (79). இவரது மகன் சிவக்குமாா் (40). திருப்பூரில் வசித்து வந்தாா். இவருடன் முத்துசாமியும் வசித்து வந்தாா். இந்நிலையில், முத்துசாமிக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டதால், திருப்பூரில் இருந்து தனது சொந்த ஊரான கூகுடி கிராமத்திற்கு வியாழக்கிழமை வந்தாா். இதனிடையே மனமுடைந்து காணப்பட்ட அவா் வீட்டின் முன்புள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.