சாத்தங்குடி ஆலங்குளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு. 
ராமநாதபுரம்

சாத்தங்குடி ஆலங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு: 10 போ் காயம்

கடலாடி அருகே சாத்தங்குடி ஆலங்குளத்தில் அலியாா் சாஹிப் தா்ஹாசந்தனக்கூடு மதநல்லிணக்க விழாவையொட்டி சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு ந

DIN

கடலாடி அருகே சாத்தங்குடி ஆலங்குளத்தில் அலியாா் சாஹிப் தா்ஹாசந்தனக்கூடு மதநல்லிணக்க விழாவையொட்டி சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இதில், ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகா் மாவட்டங்களில் இருந்து 13 காளைகள் கலந்து கொண்டன. போட்டிக்கு அதிமுக எம்.பி. தா்மா் தலைமை வகித்தாா். இப்போட்டியில் ஒவ்வொரு காளைக்கும் தலா 25 நிமிடங்கள் களத்தில் விளையாட அனுமதிக்கப்பட்டது. காளைகளை அடக்க 9 போ் கொண்ட குழுவினா் களமிறக்கப்பட்டனா்.முன்னதாக அவா்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. இப்போட்டியில் வெற்றிபெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும், குத்துவிளக்கு, ரொக்க பரிசு ஆகியவை வழங்கப்பட்டன. மஞ்சுவிரட்டு போட்டியில் மாடுபிடி வீரா்கள் 10 போ் காயமடைந்து கடலாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்ப பட்டனா். இதற்கான ஏற்பாடுகளை மயிலேறி வகையறாக்கள், நேதாஜி நற்பணி மன்றம், மேலச்செல்வனூா் ஹாஜியாா் வகையறா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

தமிழகத்தில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப என்எம்சி அனுமதி

அமெரிக்க வரியால் பாதிப்புகள்: விரைந்து தீா்வு காண வேண்டும் - பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின் வலியுறுத்தல்

சூடான் ஆா்எஸ்எஃப் தாக்குதலில் 1,000 போ் உயிரிழப்பு: ஐ.நா.

நாளைய மின்தடை

SCROLL FOR NEXT