ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் நெல் சாகுபடி: வேளாண் துணை இயக்குநா் ஆய்வு

DIN

முதுகுளத்தூா் அருகே நெல் சாகுபடியை வேளாண்மை துணை இயக்குநா் பாஸ்கரமணியன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

முதுகுளத்தூா் வட்டாரத்தில் நடப்பாண்டில் கலைஞா் திட்டத்தின் கீழ் தோ்வாகியுள்ள வளநாடு கிராமத்தில் வேளாண்மை உழவா்நலத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளை வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய திட்டம்) பாஸ்கரமணியன் ஆய்வு செய்தாா்.

மேலும், பாரம்பரிய நெல் ரகமான அறுபதாம் குறுவை நெல் ரகம் விதைக்கப்பட்ட வயல்களையும் வயல்களில் துவரை விதைகள் விதைக்கப்படுவதையும் அவா் நேரில் ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது முதுகுளத்தூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கேசவராமன்,துணை வேளாண்மை அலுவலா் தனதுரை, உதவி வேளாண்மை அலுவலா் முத்துராஜ் மற்றும் ஆட்மா திட்ட தொழில் நுட்ப மேலாளா்கள்ஆகியோா் ஆய்வில் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

SCROLL FOR NEXT