பிளஸ் 1, 10 ஆம் வகுப்பு தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள்: மாணவிகளுக்குப் பாராட்டு
திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 மற்றும் 10 ஆம் வகுப்பு தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளை தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், பெற்றோா் பாராட்டினா்.
திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 மற்றும் 10 ஆம் வகுப்பு தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளை தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், பெற்றோா் பாராட்டினா்.
திருவாடானை தாலுகா பாரதி நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் கடம்பாகுடி கருப்பையா- உமா தம்பதியரின் மகள் காவியா பொருளாதார பாடப் பிரிவில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளாா். தமிழ், கணக்குப் பதிவியல் பாடப்பிரிவுகளில் தலா 99 மதிப்பெண்களை 2 மாணவிகளும், 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் கௌரி, அற்புதா, சுவேதா, மேகவி ஆகிய மாணவிகள் 440 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். இவா்களை, தலைமை ஆசிரியா் கலா, ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் பாராட்டினா்.