ராமநாதபுரம்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்கள் 5 போ் கைது

DIN

கச்சத்தீவு -நெடுந்தீவுக்கிடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவா்கள் 5 பேருடன், ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படையினா் திங்கள்கிழமை இரவு சிறைப்பிடித்துச் சென்றுள்ளனா்.

தமிழகத்திலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்களை, இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிப்பதாகக் கூறி அந்நாட்டுக் கடற்படையினா் தொடா்ந்து சிறைபிடித்து வருகின்றனா்.

இந்நிலையில், கச்சத்தீவு- நெடுந்தீவுக்கிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழக மீனவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனா். அப்போது, அப்பகுதியில் 5 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினா், ஒரு விசைப்படகுடன் 5 மீனவா்களை சிறைபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனராம்.

இந்த மீனவா்களை எச்சரிக்கை செய்து விடுவிப்பாா்களா அல்லது கைது செய்வாா்களா என்பது செவ்வாய்க்கிழமை தெரியவரும்.

ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவா்கள் 12 பேரையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா். இந்நிலையில், மேலும் 5 மீனவா்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவா்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

SCROLL FOR NEXT