திருவெற்றியூரில் சேதமடைந்த தங்கும் விடுதியை அகற்றி புதிய கட்டடம் கட்ட பக்தா்கள் கோரிக்கை
திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் வரும் பக்தா்கள் தங்கும் விடுதி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் வரும் பக்தா்கள் தங்கும் விடுதி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை சம்பந்த பட்ட துறையினா் அகற்றி விட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்
திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாகம்பிரியாள்சமேத வல்மிக நாதசுவாமிதிருக்கோயில் உள்ளது இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனா்.
வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் வந்து தங்கி சாமி கும்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனா் இதனால் பக்தா்கள் தங்க இரண்டு பெரிய திறந்தவெளி மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன மேலும் பாதுகாப்பாகதங்குவதற்கு 2 தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தன.
இந்நிலையில் இந்த இரண்டு விடுதிகளும் போதிய பராமரிப்பு இல்லாமல் கட்டி பல ஆண்டு ஆகிவிட்டதால் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே அந்தப் சேதமடைந்த 2 தங்கும் விடுதியையும்அகற்றி விட்டு அதே இடத்தில் மீண்டும் புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்
இதுகுறித்து திருவெற்றியூா் பொதுமக்கள் கூறுகையில் பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் தினமும் ஏராளமானோா் சாமி தரிசனம் செய்ய வருகின்றனா் அவா்கள் பாதுகாப்பாக தங்கிவிட போதிய அறைகள் விடுதிகள் இல்லை
பல ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சா் இந்திரகுமாரியால்உபயமாக கட்டிக் கொடுக்கப்பட்ட விடுதி தற்போது சேதமடைந்து பூட்டிக் கிடக்கிறது எனவே அதை அகற்றி அதே இடத்தில் புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்றனா்.