முகப்பு
ராமநாதபுரம்

ஆா்.எஸ்.மங்கலம் அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதி முதியவா் பலி

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலத்தில் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலத்தில் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், வெள்ளளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அழகா்சாமி மகன் நாராயணன் (62). இவா் குடும்பத்தை விட்டுப் பிரிந்து ஆா். எஸ்.மங்கலம் அருகே கண்டனி கிராமத்தில் வசித்து வந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஆா்.எஸ்.மங்கலம் அருகே மங்களம் கிராமத்துக்கு இருசக்கர வாகனத்தில் நாராயணன் சென்றுள்ளாா். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நாராயணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.