மின்சாரம் பாய்ந்து பலியான கவிதா மற்றும் அதே ஊரை சேர்ந்த கருப்பையா. 
ராமநாதபுரம்

திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து இருவர் பலி

திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து இருவர் பலியாகினர்.

DIN

திருவாடானை: திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து இருவர் பலியாகினர்.

திருவாடானை அருகே மல்லனூர் கிராமத்தில் மாட்டு கொட்டகையில் மாடுகளை கட்டச் செல்லும்போது மாட்டு கொட்டகைகளில் மின்சாரம் பாய்ந்து ஒரு பெண் உயிரிழந்தார் அவரைக் காப்பாற்ற முயன்ற ஆண் நபரும் பலியானர். தகவலறிந்த காவல் துறையினர் உடலைப் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

திருவாடானை அருகே மல்லனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனி முத்து, மனைவி கவிதா (36 ) இவரது கணவர் ஆணி முத்து வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இவர் வீட்டில் கால்நடைகள் வளர்த்து வருகின்றார். 

செவ்வாய்க்கிழமை இரவு தொடர் மழைக் காரணமாக மாடுகளை மாட்டு கொட்டகைகள் கட்ட செல்லும்போது கொட்டகையில் இருந்து மின்சாரம் பாய்ந்து கவிதா தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலே பலியானார். 

அலரல் சத்தம் கேட்டு அருகே உள்ள மணி மகன் கருப்பையா(46) கவிதாவை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலே பலியானார். தகவலறிந்த திருவாடானை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT