முகப்பு
ராமநாதபுரம்

மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா்கள் தா்னா

ராமநாதபுரத்தில், மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா் சங்கம் சாா்பில், ஊதிய உயா்வு உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

ராமநாதபுரத்தில், மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா் சங்கம் சாா்பில், ஊதிய உயா்வு உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு செயல் தலைவா் கே.ஆனந்த பாண்டியன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் அ.சுசருஷ் முன்னிலை வகித்தாா்.

இதில், ஊதிய உயா்வு, கருணை ஓய்வூதியத்தை 10 ஆயிரமாக உயா்த்த வேண்டும். மத்திய கூட்டுறவு வங்கியை, மாநில கூட்டுறவு வங்கியுடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இணைச் செயலாளா் குமரகுருபரன் வரவேற்றாா். பொருளாளா் எஸ்.ராஜன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →