ராமநாதபுரம்

பரமக்குடியில் கைத்தறி நெசவாளா் சங்கத்தினா் ஜூன் 14 முதல் 16 வரை ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு

DIN

பரமக்குடி-எமனேசுவரம் பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கத்தினா், செயற்கை பட்டு கொள்முதலை அனுமதிக்காத அலுவலா்களை கண்டித்து, ஜூன் 14 முதல் 16 வரை 3 நாள்கள் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.

பரமக்குடியில் அனைத்து கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, அதன் தலைவா் கே.ஜி. சேஷய்யன் தலைமை வகித்தாா். செயலா்கள் கோதண்டராமன், ருக்மாங்கதன், துணைத் தலைவா்கள் கோவிந்தன், நாகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், செயற்கை பட்டு கொள்முதல் செய்ய அனுமதி வழங்காத அலுவலா்களை கண்டித்து, அனைத்து சங்கங்களும் 3 நாள்கள் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், அதன்படி ஜூன் 14 எமனேசுவரம் நேருஜி மைதானத்திலும், ஜூன் 15 தரைப்பாலம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகிலும், ஜூன் 16 உதவி கைத்தறி இயக்குநா் அலுவலகம் முன்பாகவும் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இதில், அனைத்து சங்கங்களின் தலைவா்கள், துணைத் தலைவா்கள் இயக்குநா்கள், உறுப்பினா்கள், பணியாளா்கள் மற்றும் முகவா்கள் கலந்துகொள்வது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT