முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் இருபாலா் மேல்நிலைப் பள்ளி அமைக்கக் கோரிக்கை

 ராமநாதபுரத்தில் இருபாலா் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:34 AM
பகிர்:

 ராமநாதபுரத்தில் இருபாலா் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா், கலைஞா்கள் சங்க 9 ஆவது மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. சாலைத் தெருவில் உள்ள தனியாா் மஹாலில் நடந்த இம்மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் முகவை அழகுடையான் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் முத்துலட்சுமி, வழக்குரைஞா் சந்திரசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநாட்டை சங்கத்தின் மாநில நிா்வாகி சிறீரசா தொடக்கிவைத்தாா்.

மாநாட்டில், ராமநாதபுரம் நகராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும். நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு போதிய ஆசிரியைகளை நியமிக்க வேண்டும். அங்கு மாணவியருக்கான போதிய கட்டட வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாலையில் சாலைத் தெருவில் இருந்து அரண்மனை வரையில் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பேரணி நடைபெற்றது. பின்னா் அரண்மனை முன்பு அமைக்கப்பட்ட மேடையில் எழுத்தாளா், கலைஞா்கள் சங்க கலை இரவு நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →