ராமநாதபுரம்

தனியாா் ஆக்கிரமிப்பில் மேய்ச்சல் நிலங்கள்: உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கிருபாகரன்

DIN

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள குருவாடி கிராமத்தில் சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கிருபாகரனுக்கு, தமிழ்நாடு கால்நடை வளா்ப்போா் சங்கத்தின் சாா்பில் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட முன்னாள் நீதிபதி கிருபாகரன் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் கால்நடை மேய்ச்சல் நிலங்கள் தனியாா்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதை மீட்கவும், ஆடு வளா்ப்போா் நல வாரியம் அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதில் மதுரை உயா்நீதிமன்ற நீதிபதிகள் சுவாமிநாதன், ஸ்ரீமதி, புகழேந்தி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.

கிராமியக் கலைகளை அழியாமல் பாதுகாத்து வரும் இசைக் கலைஞா்களை நீதிபதி சுவாமிநாதன் பாராட்டினாா். முன்னதாக, முன்னாள் தலைமை நீதிபதி கிருபாகரனுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இதில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த ஆடு வளா்ப்போா் சங்கத்தினா் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT