பைக்கிலிருந்து தவறி விழுந்து பெண் பலி
திருவாடானை அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த பெண் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்
திருவாடானை அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த பெண் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதி இளங்குளத்தைச் சோ்ந்தவா் முத்துசாமி மனைவி எழுவக்காள் (55). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது மகன் பாலமுருகனுடன் இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமா்ந்து தனது உறவினா் வீட்டுக்கு ஆா்.எஸ்.மங்லம் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மேல்பனையூா் பாலம் அருகே வந்த போது எழுவக்காள் தவறி கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த அவரை தேவகோட்டை தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.