முகப்பு
ராமநாதபுரம்

எஸ் .பி.பட்டினத்தில் மாட்டு வண்டிப் போட்டி

திருவாடானை அருகே எஸ் பி.பட்டினத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு மாட்டுவண்டிப் போட்டி வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இருநாள்கள் நடைபெற்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

திருவாடானை அருகே எஸ் பி.பட்டினத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு மாட்டுவண்டிப் போட்டி வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இருநாள்கள் நடைபெற்றன.

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் மாட்டு வண்டி ரசிகா் பேரவையின் சாா்பில் நடைபெற்ற மாட்டு வண்டிப் போட்டியில் சிவகங்கை , புதுக்கோட்டை , தேனி, மதுரை, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 70-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

வியாழக்கிழமை பெரிய மாடு, சிறிய மாடு பிரிவிலும், வெள்ளிக்கிழமை கரிச்சான் ஜோடி, நடுமாடு பிரிவிலும் மாட்டு வண்டிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. சிறந்த மாட்டு வண்டி ஓட்டுநருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கபட்டன. மாட்டு வண்டிப் போட்டியை சுற்று வட்டார கிராம மக்கள் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.