முகப்பு
இந்தியா

அஸ்ஸாம் ஜாதிய பரிஷத் தலைவர் லுரின்ஜோதி கோகோய் வேட்புமனு தாக்கல்!

அஸ்ஸாம் தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் செய்தது பற்றி..

Updated On : 20 மார்ச், 2026 at 11:54 AM
லுரின்ஜோதி கோகோய் - dps
பகிர்:

அஸ்ஸாம் ஜாதிய பரிஷத் தலைவர் லுரின்ஜோதி கோகோய் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள கோவாங் சட்டப்பேரவைத் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

கோகோய் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை. அஸ்ஸாம் ஜாதிய பரிஷத் கட்சி சட்டப்பேரவையிலோ, நாடாளுமன்றத்திலோ இதுவரை நுழையவில்லை.

ஏப்ரல் 9 அன்று நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அமைக்கப்பட்ட ஆறு கட்சிகளின் கூட்டணியில் அஸ்ஸாம் ஜாதிய பரிஷத் கட்சியும் ஒரு அங்கமாக உள்ளது. இக்கூட்டணியில் காங்கிரஸ், ரைஜோர் தளம் மற்றும் சிபிஐ(மார்சிஸ்ட்)ஆகிய கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, இக்கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுடன் இணைந்து, திப்ருகர் நகர வீதிகளில் கோகோய் ஊர்வலம் ஒன்றையும் நடத்தினார்.

வேட்புமனுவைத் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோகோய், ஆளும் கட்சியான பாஜகவிடமிருந்து கோவாங் தொகுதியை மீட்டெடுப்போம் என்று நம்பிக்கை உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தத் தொகுதி மக்களின் குரலாகவும், அதேவேளையில் மாநில மக்களின் குரலாகவும் ஒலிப்பதே எனது நோக்கமாகும்.

126 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9 அன்று நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று எண்ணப்படுகிறது.

summary

The president of Assam Jatiya Parishad (AJP), Lurinjyoti Gogoi, on Friday filed his nomination for the Khowang constituency in Dibrugarh district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.