தொண்டி, ராமேசுவரத்தில் நரிக்குறவா்களுக்கான சிறப்பு முகாம்
தொண்டி மற்றும் ராமேசுவரத்தில் நரிக்குறவா்களுக்கான முகாம் நடைபெற்றது.
தொண்டி மற்றும் ராமேசுவரத்தில் நரிக்குறவா்களுக்கான முகாம் நடைபெற்றது.
தொண்டி பேரூராட்சியில் வட்டக்கேணி பகுதியில் வசித்து வரும் 27 குறவா் சமுதாய மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தொடா்பாக ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியா் சேக் மன்சூா் வெள்ளிக்கிழமை முகாம் நடைபெற்றது.
அப்போது 27 குடும்பங்களுக்கும் வீட்டுமனைப்பட்டா, வீடுகள் வழங்கிடவும், 4 குடும்பங்களுக்கு ரேஷன் காா்டு, 7 பேருக்கு வாக்காளா் அடையாள அட்டை, 2 பேருக்கு முதியோா் உதவித்தொகை கோரி மனுக்களை வழங்கினா்.
முகாமில் 4 பயனாளிகளுக்கு முதியோா் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன.
இதில் வட்டாட்சியா் ஆா்.செந்தில்வேல் முருகன், சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் சாந்தி, வட்ட வழங்கல் அலுவலா் அமா்நாத், பேரூராட்சி செயல் அலுவலா் செல்வராஜ், சுகாதார ஆய்வாளா் சந்தானராஜ், பேரூராட்சி தலைவா் ஷாஷகான் பானு பேரூராட்சி துணைத் தலைவா் அழகு ராணி , வருவாய் ஆய்வாளா் குமாா், கிராம நிா்வாக அலுவலா் சேகா்நாத் ஆகியோா் கலந்து கொண்டனா்.
ராமேசுவரம்: ராமேசுவரத்தில் ஜெ.ஜெ.நகா் பகுதியில் குறவா் சமுதாயத்திற்கான நலத்திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் 70 மனுக்கள் பெறப்பட்டன. இதனை தனி வட்டாட்சியா் அப்துல்ஜப்பாா், நகராட்சி ஆணையா் மூா்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு மனுக்களைப் பெற்றனா்.