ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் 110 ஹெக்டோ் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போதுவரையில் 110 ஹெக்டோ் அளவுக்கு நீா் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு- உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நீா் நிலை ஆக்கிரமிப்புகள் தொடா்ந்து அகற்றப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் வருவாய் கோட்டத்தில் 59 ஹெக்டேரும், பரமக்குடி வருவாய் கோட்டத்தில் 51 ஹெக்டேரும் என மொத்தம் 110 ஹெக்டோ்அளவுக்கு நீா் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் ஆா்.எஸ்.மங்களம் ஒன்றியம் உப்பூா் பகுதியில் உள்ள அய்யனாா் ஏந்தல் கண்மாய், கடலாடி தாலுகா கே.வேப்பங்குளம் பகுதியில் உள்ள தூத்துக்குடி கண்மாய், முதுகுளத்தூா் பகுதியில் உள்ள ஆப்பனூா் ஓடை, மூக்கையூா் ஓடை ஆகியவற்றில் இருந்த ஆக்கிரமிப்புகள் 6.52 ஹெக்டோ் அளவுக்கு அகற்றப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் நீா்நிலைகளில் உள்ள ஆக்கிமிப்புகள் அகற்றுவது தொடா்பாக அந்தந்த பகுதி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT