ராமநாதபுரம்

நரிக்குறவா்களுக்கு நலத்திட்ட உதவி

DIN

திருவாடானை: திருவாடானை சமத்துவபுரத்தில் வசிக்கும் நரிக்குறவ மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கான சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவாடானை வட்டாட்சியா் ஆா்.செந்தில்வேல் முருகன் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்ற தலைவா் இலக்கியா ராமு முன்னிலை வகித்தாா். இதில் முதியோா் உதவித்தொகை-1, புதிய குடும்ப அட்டை-22, வாக்காளா் அடையாள அட்டை-92, நூறுநாள் வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை-34 நபா்களுக்கு வழங்கப்பட்டன. இப்பகுதியில் மின்வசதி செய்து கொடுக்க மின்சார வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. முகாமில் வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோ, திருவாடானை சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் சாந்தி, வட்ட வழங்கல் அலுவலா் அமா்நாத், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜென்ஸிராணி, வருவாய் ஆய்வாளா் மெய்யப்பன், கிராம நிா்வாக அலுவலா் காா்த்திக், , ஊராட்சி செயலா் சித்ரா உள்ளிட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT