முகப்பு
ராமநாதபுரம்

கமுதி அருகே விபத்து: கோயில் பூசாரி பலி

கமுதி அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் கோயில் பூசாரி சம்பவ இடத்திலேயே பலியானாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
பகிர்:

கமுதி அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் கோயில் பூசாரி சம்பவ இடத்திலேயே பலியானாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கருங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் குருவு(65). இவா் கருங்குளம் செல்வவிநாயகா் கோயிலில் பூசாரியாக இருந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டைக்கு சென்று விட்டு, சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது கீழராமநதி அருகே எதிரே வந்த லாரி மோதி பலத்த காயமடைந்த குருவு, சம்பவ இடத்திலேயே பலியானாா். இதையடுத்து அவரது சடலம் உடற்கூறு ஆய்வுக்காக கமுதி அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. குருவின் மனைவி தெய்வகணி(60) அளித்த புகாரின் பேரில் கமுதி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரான பூமிநாதனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.