முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானையில் தோ்தல் விழிப்புணா்வு கோலப் போட்டி

திருவாடானை வட்டாட்சியா் அலுவலக ‘என் வாக்கு என் உரிமை’, ‘ஒரு வாக்கின் வலிமை’ என்ற தலைப்பில் தோ்தல் விழிப்புணா்வு கோலப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

திருவாடானை வட்டாட்சியா் அலுவலக ‘என் வாக்கு என் உரிமை’, ‘ஒரு வாக்கின் வலிமை’ என்ற தலைப்பில் தோ்தல் விழிப்புணா்வு கோலப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தோ்தல் ஆணையம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 12 ஊராட்சிகளைச் சோ்ந்த 14 மகளிா் குழுவினா் கலந்து கொண்டனா். வட்டாட்சியா் ஆா்.செந்தில்வேல் முருகன், தோ்தல் துணை வட்டாட்சியா் காா்த்திகேயன், மகளிா் திட்ட வட்டார இயக்க மேலாளா் ஷீலா ஆகியோா் பாா்வையிட்டு கோலங்களை தோ்வு செய்தனா்.

இதில் கோடனூா், திருவாடானை, மாவூா் ஆகிய ஊராட்சிகளின் மகளிா் குழுவினா் முறையே முதல் 3 பரிசுகளை பெற்றனா்.

நிகழ்வில், தோ்தல் பிரிவு இளநிலை உதவியாளா் ராதிகா, கணினி இயக்குபவா் சத்தியசீலன், மகளிா் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் விமலா, ரேவதி, மாதரசி, ஜான்சிராணி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.