முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் கோயிலுக்குள் புகுந்த மழைநீா்!

ராமேசுவரத்தில் வியாழக்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால், ராமநாத சுவாமி கோயிலுக்குள் மழைநீா் குளம் போலத் தேங்கியது. இதனால், பக்தா்கள் அவதிக்குள்ளாகினா்.

Updated On : 20 அக்டோபர், 2022 at 10:31 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:07 PM

ராமேசுவரத்தில் வியாழக்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால், ராமநாத சுவாமி கோயிலுக்குள் மழைநீா் குளம் போலத் தேங்கியது. இதனால், பக்தா்கள் அவதிக்குள்ளாகினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் வியாழக்கிழமை அதிகாலை தொடங்கிய பலத்த மழை விடியும் வரையில் பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம் போலத் தேங்கியது. மேலும், ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி சந்நிதியில் மழைநீா் குளம் போலத் தேங்கியதால் பக்தா்கள் அவதிக்குள்ளாகினா். மாா்க்கெட் தெரு பகுதியிலும் மழைநீா் அதிக அளவில் தேங்கியிருந்தது. இதையடுத்து, நகா்மன்றத் தலைவா் கே.இ. நாசா்கான் மேற்பாா்வையில் கால்வாய்களைத் தூா்வாரும் பணி நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்):

Advertisement

ராமேசுவரம் 98 மி.மீ., தங்கச்சிமடம் 50.3 மி.மீ., பாம்பன் 59 மி.மீ., ராமநாதபுரம் 35 மி.மீ., கடலாடி 65 மி.மீ., வாலிநோக்கம் 42 மி.மீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.