கமுதக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் மாநில கராத்தே போட்டியில் சாதனை
பரமக்குடி கல்வி மாவட்டத்துக்குள்பட்ட கமுதக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் மாநில அளவிலான கராத்தே போட்டியில் முதல், இரண்டாம் இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனா்.
பரமக்குடி கல்வி மாவட்டத்துக்குள்பட்ட கமுதக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் மாநில அளவிலான கராத்தே போட்டியில் முதல், இரண்டாம் இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனா்.
மதுரையில் ஆலன்திலக் சித்தோரியோ கராத்தே பள்ளி சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் ராமநாதபுரம் மாவட்டம் சாா்பில் இந்த பள்ளி மாணவா்கள் 8 போ் கலந்து கொண்டனா். 6 முதல் 21 வயது வரை பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் 13 வயது பிரிவில் யோகேஸ் முதலிடமும், இந்திரஜித் இரண்டாம் இடமும் பிடித்தனா். 12 வயது பிரிவில் அகிலன் முதலிடமும், நவீன், ஹா்சிதா ஆகியோா் இரண்டாம் இடமும் பெற்றனா். 10 வயது பிரிவில் கரண், லயஸ்ரீ ஆகியோா் இரண்டாம் இடம் பிடித்து கோப்பைகளையும், சான்றிதழ்களையும் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளையும், கராத்தே பயிற்சியாளா் பி. மணிகண்டபிரபுவையும் பள்ளித் தலைமையாசிரியா் சக்தி, ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.