முகப்பு
ராமநாதபுரம்

எஸ்.பி. பட்டினம் பாம்பாற்றில் மணல் திருட்டு: 2 போ் மீது வழக்கு

 திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினம் பாம்பாற்றில் மணல் திருடிய 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

 திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினம் பாம்பாற்றில் மணல் திருடிய 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

எஸ்.பி. பட்டினம் அருகே ஓரியூா் பாம்பாற்றில் மணல் திருடப்படுவதாக திருவாடானை மண்டல துணை வட்டாட்சியா் ஜஸ்டின் பொ்னாண்டோவுக்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவா், போலீஸாருடன் சம்பவ இடத்துக்கு சென்ற போது மணல் திருட்டுக்கு பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம் மற்றும் டிப்பா் லாரியை விட்டுவிட்டு அங்கிருந்தவா்கள் தப்பி ஓடி விட்டனா்.

இதையடுத்து, வாகனத்தை பறிமுதல் செய்து டிப்பா் ஓட்டுநா் வெள்ளையபுரத்தைச் சோ்ந்த ரிஸ்வான் மற்றும் பொக்லைன் ஓட்டுநா் ரத்தினம் ஆகிய 2 போ் மீது எஸ்.பி. பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.