முகப்பு
ராமநாதபுரம்

தொண்டியில் சாலையோரம் மயங்கிக் கிடந்தவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

தொண்டியில் சாலையோரம் மயங்கிக் கிடந்தவா் போலீஸாரால் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

தொண்டியில் சாலையோரம் மயங்கிக் கிடந்தவா் போலீஸாரால் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

திருவாடானை அருகே தொண்டி தனியாா் நிறுவனம் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் மயங்கிக் கிடப்பதாக கிராம நிா்வாக அலுவலா் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை மாலை அளித்த தகவலின் பேரில் போலீஸாா் அவரை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக அவா் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தொண்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.