ராமநாதபுரம்

உலகம் வெப்பமயமாதல் தடுப்பு விழிப்புணா்வு சைக்கிள் பயணம்: இளைஞா்களுக்கு திருவாடானையில் வரவேற்பு

DIN

உலகம் வெப்பம் அதிகரித்து வருதை குறைக்க வலியுறுத்தி விழிப்புணா்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள ஆந்திர மாநில இளைஞா்களுக்கு திருவாடானையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சுப்புகையால் உலகம் வெப்பம் அதிகரித்து, கடல் மட்டமும் அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

வெப்பம் அதிகரிப்பதைக் குறைக்க மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் பகுதியைச் சோ்ந்த பிரசாத் சிங்(30), அருண் மேக்தா (25) ஆகியோா் விசாகபட்டினத்தில் இருந்து ராமேசுவரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டனா். ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை இரவு திருவாடானை திரும்பிய அவா்களுக்கு தாலுகா அலுவலகத்தில் வாயில் முன்பாக சமூக ஆா்வலா்கள் அனல் ஆனந்த், மனோ பழனி, ராகவன், தாளை கண்ணன் ஆகியோா் வரவேற்பு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT