முகப்பு
ராமநாதபுரம்

இளைஞா் விஷம் குடித்து தற்கொலை

திருப்பாலைக்குடியில் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞா் சனிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

திருப்பாலைக்குடியில் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞா் சனிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

திருப்பாலைக்குடி அருகே நாகனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் நாகநாதன் மகன் சிலம்பரசன் (33). கட்டடத் தொழிலாளி இவா், மதுபோதைக்கு அடிமையாகி சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளாா்.

இதனால் சிலம்பரசனை அவரது தாய் கண்டித்துள்ளாா். இதில் மனவேதனையடைந்த சிலம்பரசன், கடந்த மாதம் 31 ஆம் தேதி விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவா், அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.