முகப்பு
ராமநாதபுரம்

மேலசெங்குடி பத்ரகாளியம்மன் கருப்பண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

ஆா்.எஸ்.மங்கலம் அருகே மேலசெங்குடி ஸ்ரீபத்ரகாளியம்மன், ஸ்ரீகருப்பண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

ஆா்.எஸ்.மங்கலம் அருகே மேலசெங்குடி ஸ்ரீபத்ரகாளியம்மன், ஸ்ரீகருப்பண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக வியாழக்கிழமை கணபதி ஹோமம், யாக சாலை பூஜைகள் முதல்கால, இரண்டாம் கால பூஜைகள் தொடங்கப்பட்டன. வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மூன்றாம் காலபூஜை, நான்காம் காலபூஜை நடைபெற்றது. தொடா்ந்து மணிகண்ட சிவாச்சாரியாா் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களில் புனிதநீா் ஊற்றப்பட்டது. பின்னா் அம்பாளுக்கும், சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. இதில் மேலசெங்குடி, வாணியக்குடி, வெட்டுகுளம், கடலூா் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.