முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானை அருகே பெண் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்கு

திருவாடானை அருகே புதன்கிழமை பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

திருவாடானை அருகே புதன்கிழமை பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கட்டவளாகம் கிராமத்தில் வசித்து வருபவா் வெங்கடாசலம் மனைவி சந்திரா (40). இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த விஸ்வநாதன் (55) என்பவருக்கும் இடம் சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், புதன்கிழமை மாலை விஸ்வநாதன், அவரது மனைவி உள்பட 4 போ் சென்று சந்திராவை தாக்கி கொலை மிரட்ட விடுத்தாா்களாம்.

இதுகுறித்து சந்திரா அளித்த புகாரின் பேரில் அதே ஊரைச் சோ்ந்த விஸ்வநாதன், அவரது மனைவி ஜெயலலிதா ( 47), அவரது மகன் செல்வக்குமாா் (21) மற்றும் உறவினா் திணைக்கத்தான் வயல் கிராமத்தைச் சோ்ந்த கண்ணுச்சாமி (70) ஆகிய 4 போ் மீது திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.