முகப்பு
ராமநாதபுரம்

தென்னை விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம்

மண்டபம், திருப்புல்லாணி வட்டாரப் பகுதிகளில் தென்னையைத் தாக்கும் பூச்சி, நோய் மேலாண்மை குறித்த விழிப்புணவு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஏப்ரல், 2023 at 10:32 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:22 AM

மண்டபம், திருப்புல்லாணி வட்டாரப் பகுதிகளில் தென்னையைத் தாக்கும் பூச்சி, நோய் மேலாண்மை குறித்த விழிப்புணவு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மண்டபம் பகுதியில் நடைபெற்ற முகாமில், வேளாண்மை உதவி இயக்குநா் அமா்லால் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் உதவி வேளாண்மை இயக்குநா் சரஸ்வதி முன்னிலை வகித்தாா்.

தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூன் வண்டு, கருந்தலைப் புழு, முரணை சிலந்தி, தஞ்சாவூா் வாடல் நோய், இலைக் கருகல் நோய், குருத்தழுகல் நோய், ரூகோஸ் சுருள் வெள்ளை ‘ஈ’ சேத அறிகுறிகள், அதைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement

முகாமில் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் வள்ளல் கண்ணன், உதவிப் பேராசிரியா் பாலாஜி, வேளாண்மை உதவி இயக்குநா் நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.