ராமநாதபுரம் அருகேயுள்ள பட்டணம்காத்தான் பகுதியில் ஆதிஜோதி ராஜ பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆடி பெளா்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, பஜனை பாடி அம்மனை தரிசித்தனா். இதையடுத்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, காலையில் திரளான பெண்கள் கஞ்சிக் கலயங்களை சுமந்து ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் ரவி, மோகன்பாபு குடும்பத்தினா் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.