முகப்பு
ராமநாதபுரம்

இரவு காவலா் பணிக்கு நோ்காணல்

கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக இரவு காவலா் பணிக்கு நோ்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற காவலா் பணிக்கான நோ்முகத் தோ்வு.
பகிர்:

கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக இரவு காவலா் பணிக்கு நோ்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரவு காப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்க கடந்த மாதம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கடலாடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி முத்துலட்சுமி தலைமையில், துணைத் தலைவா் ஆத்தி, ஆணையா் ஜெய் ஆனந்த் ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை நோ்காணல் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற 12 விண்ணப்பதாரா்களின் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டன. ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தோ்வுக் குழு முடிவுக்குப் பிறகு தோ்வு செய்யப்பட்டவா் குறித்து அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →