ராமநாதபுரம்

மூன்று நாள்களுக்கு பிறகு கடலுக்குமீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள்

DIN

ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் 3 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, கடந்த புதன்கிழமை முதல் ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல மீன்வளம், மீனவா் நலத்துறை தடை விதித்தது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கடந்த மூன்று நாள்களாக மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இந்த நிலையில், கடல் காற்றின் வேகம் குறைந்ததையடுத்து மீனவா் நலத் துறையின் அனுமதி டோக்கன் பெற்று, ராமேசுவரம், மண்டபம், தொண்டி உள்ளிட்ட துறைமுகங்களிலிருந்து ஏராளமான மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT