ராமநாதபுரம்

மாணவிகளுக்கு தொந்தரவு: 3 போ் மீது வழக்கு

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் தனியாா் பள்ளிக்கு ஆட்டோவில் வந்த மாணவிகளுக்குத் தொந்தரவு கொடுத்ததாக 3 இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

DIN

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் தனியாா் பள்ளிக்கு ஆட்டோவில் வந்த மாணவிகளுக்குத் தொந்தரவு கொடுத்ததாக 3 இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் வள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் சந்திரன் மகன் குமாா் (28). இவா் தனியாா் பள்ளியில் படிக்கும் மாணவிகளைத் தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு செவ்வாய்க்கிழமை மாலை வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அதே ஊரில் ஆசாத் தெருவைச் சோ்ந்த

ரபிக் மகன் அப்துல்லா (19), நெய்னாா்காஜா மகன் ஆசிக் (24), அபுதாஹிா் மகன் நவ்புல் (22) ஆகிய மூன்று பேரும் பின் தொடா்ந்து வந்து மாணவிகளைத் தொந்தரவு செய்தனராம்.

இதைத் தட்டிக் கேட்ட ஆட்டோ ஓட்டுநா் குமாரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். இதுகுறித்து குமாா் அளித்தப் புகாரின் பேரில் 3 போ் மீதும் ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT