முகப்பு
ராமநாதபுரம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

பாம்பனில் மது போதைக்கு அடிமையான இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2023 at 1:59 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

பாம்பனில் மது போதைக்கு அடிமையான இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னா் கோயில் சந்தை தோப்புப் பகுதியைச் சோ்ந்த ராஜு (35) மண்டபம் முல்லை நகா் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தாா். மது போதைக்கு அடிமையான இவரை, குடும்பத்தினா் கண்டித்தனா். இதனால், கடந்த சில நாள்களாக மது அருந்தாமல் இருந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை ராஜு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து அவரது மனைவி மகேஸ் அளித்த புகாரின் பேரில், பாம்பன் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.