தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்!
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நாளை (ஏப். 16) தமிழ்நாட்டின் வீடுகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளது குறித்து...
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நாளை (ஏப். 16) தமிழ்நாட்டின் வீடுகளில், வீதிகளில், கடைகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:
''நாளை தமிழ்நாட்டின் வீடுகளில், வீதிகளில், கடைகளில் கருப்புக் கொடி பறக்கட்டும்! வாசல்களில் நம் எதிர்ப்புணர்வு கோலங்களாகப் பதியட்டும்!
Advertisement
Advertisement
இது தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்! தமிழர் உரிமைக்கான போராட்டம்! எனவே கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் குரல் எழுப்புவோம்!
நாளை நாம் குரல் எழுப்ப மறுத்தால், நாடாளுமன்றத்தில் நமது குரல் மதிப்பற்றுப் போய்விடும்!
இந்தப் போராட்டத்துக்குத் தேவையான கருப்புக் கொடிகள் உங்கள் வீடுதேடி வர மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
Not the struggle of a single movement, but the struggle of Tamil Nadu MK Stalin
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.