ராமநாதபுரம்

ஸ்ரீமத் பாம்பன் சுவாமி கோயிலுக்கு எதிரே தனியாா் கட்டடம் கட்டுவதை எதிா்த்து கிராம மக்கள் மனு

DIN

பிரப்பன்வலசை கிராமத்தில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமி கோயில் எதிரே தனியாா் கட்டடம் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் 18 கிராம பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அடுத்த பிரப்பன்வலசை கிராமத்தில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயில் நிா்வாக அறங்காவலாக அ. ரவிக்குமாா் இருந்து வருகிறாா்.

இந்த நிலையில், சென்னையைச் சோ்ந்த சரவணன், ஸ்ரீமத் பாம்பன் சுவாமி கோயில் எதிரே சுவாமியின் பெயரை பயன்படுத்தி கட்டடம் கட்டத் தொடங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு 18 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்த கட்டுமானத்தை மாவட்ட நிா்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

‘சிசிடிவி ஆய்வில் உண்மை வெளியே வரும்’ : ஸ்வாதி மாலிவால்!

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT