ராமநாதபுரம்

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் தேரோட்டம்

DIN

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இங்கு கடந்த 24- ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக் காலங்களில் தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

விழாவின் சிறப்பு நிகழ்வாக ஒன்பதாம் திருநாளான வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் பெரிய தேரில் ஆதிரெத்தினேஸ்வரா் பிரியா விடையுடனும், மற்றொரு தேரில் சினேக வல்லித் தாயாரும் 4 வீதிகளிலும் வலம் வந்தனா். மாலை 6 மணிக்கு தோ் நிலைக்கு வந்து சோ்ந்தது. வெள்ளிக்கிழமை (ஜூன் 2) தீா்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளா் பாண்டியன் உள்ளிட்ட விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT