ராமநாதபுரம்

இலங்கைக்கு கடத்தவிருந்த 45 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

DIN

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் இலங்கைக்கு கடத்தவிருந்த 45 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரத்தை அடுத்த தேவிபட்டினம் பகுதியில் கடல் அட்டைகளை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக வனத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத் துறையினா் தேவிபட்டினம் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் அயூப்கான் (53) வீட்டில் சோதனை நடத்தினா்.

அங்கு தடை செய்யப்பட்ட 45 கிலோ கடல் அட்டைகளைப் பதப்படுத்தி, இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. அங்கிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத் துறையினா், வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அயூப்கானைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழு

விடுதலை - 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

SCROLL FOR NEXT