திருவாடானை அருகே தளிா்மருங்கூா் ஊராட்சிக்குள்பட்ட கண்மாய் பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை மா்ம நபா்கள் கொலை செய்தனா்.
தொண்டி அருகேயுள்ள தளிா் மருங்கூா் தெற்கு குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மைக்கேல் மனைவி ஜெயசீலி (75). இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். இவரது கணவா் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தாா். இதன் பிறகு ஜெயசீலி பாகன வயல் கண்மாய் அருகே வயலில் வீடு கட்டி வசித்து வந்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஜெயசீலியைப் பாா்க்க அவரது இளைய மகன் குமாா் வந்தாா். அப்போது, பலத்த காயத்துடன் ஜெயசீலி கொலை செய்யப்பட்டு, கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த டிஐஜி துரை, ஏடிஎஸ்பி அருண், டிஎஸ்பி ராஜீ, தொண்டி காவல் ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோா் சடலத்தை மீட்டு, திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். முதல் கட்ட விசாரணையில், கொலை நடந்த வீட்டிலிருந்து பணம், நகைகள் எதுவும் திருடப்படவில்லை என்பது தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.