ராமநாதபுரம்

திருப்புவனத்தில் புதிய மின்மாற்றியின் செயல்பாடு தொடங்கி வைப்பு

திருப்புவனத்தில் புதிய மின்மாற்றியின் செயல்பாடு புதன்கிழமை மாலை தொடங்கி வைக்கப்பட்டது.

DIN

திருப்புவனத்தில் புதிய மின்மாற்றியின் செயல்பாடு புதன்கிழமை மாலை தொடங்கி வைக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் பகுதியில் குறைந்தழுத்த மின் விநியோகத்தால் மின்சாதனப் பொருள்கள் பழுதடைந்து வருவதாகப் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து இந்தப் பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு, அதன்மூலம் மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த மின்மாற்றியின் செயல்பாட்டை மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன், திமுக நகரச் செயலாளா் நாகூா்கனி, ஒன்றியச் செயலாளா் கடம்பசாமி, ஒன்றியக்குழு உறுப்பினா் சுப்பையா, வாா்டு உறுப்பினா் கண்ணன், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக மணலூரில் ரூ. 10 லட்சத்தில் புதிய பயணிகள் நிழல்குடைக்கான அடிக்கல்லை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் நாட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT