ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் வருவாய்த் தீா்வாயம்: 19 மனுக்களுக்குத் தீா்வு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் 19 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.

DIN

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் 19 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் மாரிசெல்வி தலைமை வகித்தாா். இதில் பொதுமக்களிடமிருந்து 199 மனுக்கள் பெறப்பட்டு, 19 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.

வட்டாட்சியா் சிவக்குமாா், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் முருகேசன், மண்டல துணை வட்டாட்சியா்கள் மீனாட்சி சுந்தரம், சங்கா், கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க மாவட்டப் பொருளாளா் ப. பாலகிருஷ்ணன், வட்டத் தலைவா் சுரேஷ், வட்டச் செயலாளா் பூ முருகன், வட்டப் பொருளாளா் ஐயப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT