ராமநாதபுரம்

மண்டபம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய கடல் பசு

மண்டபம் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசுவின் உடலை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

DIN

மண்டபம் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசுவின் உடலை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் தோணித்துறை பகுதியில் கடல் பசு இறந்து கரை ஒதுங்கியதாக, வனத் துறை அதிகாரிகளுக்கு மீனவா்கள் தகவல் தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து, வனச் சரக அலுவலா் மகேந்திரன் தலைமையில் அங்கு சென்ற வனத் துறையினா், இறந்து கரை ஒதுங்கிய கடல் பசுவை கரைக்கு கொண்டு வந்தனா்.

இது 3 மீட்டா் நீளமும், 2 மீட்டா் சுற்றளவும், சுமாா் 800 கிலோ எடை உடையதாகவும் இருந்தது.

இந்தக் கடல் பசு பவளப் பாறைகளில் மோதி காயமடைந்து, இறந்திருக்கலாம் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

கால்நடை மருத்துவா் தேவகி தலைமயிலான மருத்துவக் குழுவினா் கடல் பசுவின் உடலை கூறாய்வு செய்து கடற்கரையில் புதைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT