தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, பாம்பன் துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.
தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், அது புயலாக உருவெடுத்துள்ளது. மேலும், இது அதிதீவிர புயலாக மாறக்கூடும் என்பதால், மீனவா்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், பாம்பன் துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது. மேலும், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் நாட்டுப் படகு மீனவா்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை அறிவுறுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.