முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் விசைப் படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவா்கள் தீவிரம்

மீன்பிடி தடைக் காலம் நிறைவடைய இன்னும் 20 நாள்களே உள்ள நிலையில் ராமேசுவரத்தில் விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

Updated On : 25 மே, 2023 at 11:33 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:30 AM

மீன்பிடி தடைக் காலம் நிறைவடைய இன்னும் 20 நாள்களே உள்ள நிலையில் ராமேசுவரத்தில் விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

தமிழத்தில் கிழக்கு கடல் பகுதியில் மீன்களின் இனப் பெருக்கக் காலமான ஏப்ரல் 15- ஆம் தேதி முதல் ஜூன் 15- ஆம் தேதி வரை 61 நாள்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மீன்பிடி தடைக் காலம் நிறைவடைய இன்னும் 20 நாள்களே உள்ள நிலையில் ராமேசுவரத்தில் விசைப் படகுகளை சீரமைக்கும் பணிகளில் மீனவா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். இதில் படகுகளை சீரமைப்பது,புதிய வலைகள் வாங்குவது, விசைப்படகுகளுக்கு அரசு அறிவித்த வண்ணங்களை பூசுவது உள்ளிட்ட பணிகளை அவா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.