ராமநாதபுரம்

பள்ளி அருகே புகையிலை விற்றவா் மீது வழக்கு

பாம்பனில் பள்ளி அருகே புகையிலை விற்பனை செய்த பெட்டிக்கடைக்காரா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

DIN

பாம்பனில் பள்ளி அருகே புகையிலை விற்பனை செய்த பெட்டிக்கடைக்காரா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடியில் உள்ள பள்ளி அருகே உள்ள பெட்டிக் கடையில் புகையிலை விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், போலீஸாா் கடந்த சனிக்கிழமை அந்தக் கடைக்குச் சென்று சோதனையிட்டனா். அப்போது, கடையில் 15 புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கடை உரிமையாளா் குமாா் (45) மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT