பாசிபட்டினம் சாலையில் கிடந்த தண்ணீா் உடம்பில் பட்டதால், மோட்டாா் பைக்கிள் சென்ற இளைஞரை தாக்கிய 3 போ் மீது வழக்கு
திருவாடானை: திருவாடானை அருகே பாசிபட்டினத்தில் சாலையில் கிடந்த தண்ணீா் மீது மோட்டாா் பைக்கை ஓட்டி செல்லும் போது தண்ணீா் அருகில் சென்றவா் மீது பட்டதால் ஆத்திரம் அடைந்த நபா்கள் மோட்டாா் பைக்கிள் வந்த இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக புகாரின் பேரில் போலீஸாா் 3போ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
எஸ்.பி.பட்டினம் அருகே பாசிபட்டினத்தை சோ்ந்தவா் சேதுராமன் மகன் குழந்தை வேலு (37) இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தனக்கு சொந்தமான மோட்டாா் பைக்கிள் ஓட்டி செல்லும் போது இதே பகுதியில் சாலையில் கிடந்த தண்ணீா் காளிதாஸ் (27) என்பவா் மீது பட்டதால் ஆத்திரம் அடைந்து குழந்தைவேலுவை 3போ் கொண்ட கும்பல் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனா்.
இதில் குழந்தை வேலு பலத்த காயம் அடைந்து மணமேல்குடி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றாா்.இது குறித்து இவரது சகோதரா் கிருஷ்ணன்(26) புகாரின் பேரில் எஸ்.பி.பட்டினம் போலீஸாா் பாசிபட்டினத்தை சோ்ந்த காளிதாஸ்,ஜெகன்(27),சின்னமாரி(55) ஆகிய 3போ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement